world

img

கொலம்பியா இடது வெற்றியும் எதிர்காலமும்

 சுதந்திர கொலம்பியாவின் 200 ஆண்டு கால வர லாற்றில் அதிபர் இல்லமான “காசா டி நாரி பியோ”  மாளிகைக்குள் முதன் முதலாக ஒரு  இடதுசாரி அடியெடுத்து வைத்துள்ளார். கொலம்பியா, லத்தீன் அமெரிக்க பகுதி நாடுகளில் மக்கள் தொகையில்  மூன்றாவது பெரிய நாடு ஆகும். இதுவரை எந்த அதிப ரும் கண்டிராத வித்தியாசத்தில் - அதாவது ஒரு கோடியே 10 லட்சம் வாக்குகள் - வெற்றியும் ஈட்டியுள்ளார். இளை ஞர்கள் பெரும் ஆதரவைத் தந்துள்ளனர். துணை அதிபர் தேர்தலிலும் முதன் முறையாக ஒரு சுற்றுச் சூழல் செயற்  பாட்டாளர் ஆப்ரிக்க - கொலம்பிய பெண்மணி அந்த நாட்டின் விளிம்பு நிலை எளிய மக்கள் வாழும் காகா பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இடது அலையின் இன்னொரு துள்ளல்

பெட்ரோ வெற்றி பெற்றுள்ள இதே காலத்தில் சிலியில் கேப்ரியல் போரிக், ஹோண்டுராசில் சியோமரா கேஸ்ட்ரோ, பொலிவியாவில் லூயிஸ் ஆர்க், பெருவில் பெட்ரோ கேஸ்டிலோ ஆகிய இடதுசாரிகள் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கெனவே மெக்சிகோவில் அன்றிஸ் மேனுவல் லோபஸ் ஒபரடார், அர்ஜென்டினாவில் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார்கள். அக்டோ பர் மாதம் நடைபெறவுள்ள பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா வெற்றி பெறுவார் என்று கணிப்புகள் வந்துள்ளன.  இடதுசாரிகளின் இவ் வெற்றிக்கு பின்புலமாக இப் பகுதி யில் நிகழ்ந்த கோவிட் மரணங்கள் உள்ளன என்பது முக்கிய மான காரணிகளில் ஒன்று. உலக மக்கள் தொகையில் 8 சதவீதத்தை கொண்ட இந்த பகுதியில் உலக கோவிட் மர ணங்களில் 30 சதவீதம் நிகழ்ந்துள்ளன. காலத்திற்கும் மறக்கவே இயலாத மோசமான கோவிட் நிர்வாகத்தை இப்  பகுதியில் இருந்த வலதுசாரி அரசாங்கங்கள் செய்தன. வலதுசாரி அதிபர் பொல்சனாரோ ஆட்சி உள்ள பிரே சிலில் 7 லட்சம் மரணங்கள் நிகழ்ந்தன. 

120 ஆண்டுகள் காணாத நெருக்கடி

பொருளாதார பாதிப்புகளும் முக்கிய காரணம். ஐ.நா  சபையின் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுக்  கான பொருளாதார ஆணையம் ( ECLAC) இந்த பகுதியின் பொருளாதார நெருக்கடியை 120 ஆண்டுகள் காணாத ஒன்று  என வர்ணித்தது. 2020 இல் 7 சதவீதம் பொருளாதாரம் சுருங்கி யது. உலக ஜி.டி.பி யில் ஏற்பட்ட சுருக்கத்தை போல இது  இரு மடங்காகும்.  இப்போது இப்பகுதி கண்டு வரும் புதிய “இளம் சிவப்பு  புரட்சியை” 2000 - 13 காலத்தில் நடைபெற்ற மாற்றங்கள் உடன்  ஒப்பிட முடியுமா என்பது விவாதத்திற்குரியதே. (இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டு நிகழ்ந்த மாற்றங்கள் பின்னர் வடிந்து போயின.) முதல் பத்தாண்டு மாற்றங்கள் வளமையை, வறுமைக் குறைப்பை இப்பகுதியில் கொண்டு  வந்தன. உலகின் அதிகமான வருமான ஏற்றத்தாழ்வு மிக்க  இப் பகுதியில் அம் முன்னேற்றங்கள் முக்கியமானவையாக இருந்தன. அவை மண்டல ரீதியான பொருளாதார ஒருங்கி ணைப்பையும் பலப்படுத்தின. தென் அமெரிக்க நாடு களின் கூட்டமைப்பு (UNASUR), அமெரிக்க - கரீபிய நாடு களின் சமூகம் (CELAC), பசிபிக் கூட்டணி (Pacific Alliance) ஆகியன முக்கியமான முன்னெடுப்புகளாக அமைந்தன. சிலி, கியூபா, வெனிசூலா வெளியுறவு அமைச்சர்கள் சீனா,  இந்தியாவோடு பேச்சு வார்த்தைகள் கூட நடத்தினர் என்பது இன்று நினைத்து பார்க்கக் கூட முடியாத முன் முயற்சி ஆகும்.

நிலைக்குமா எழுச்சி? 

அதைப் போன்ற இடதுசாரிகளின் ஏற்றம் ஆக இப்போ தைய வெற்றிகள் அமையுமா? திரும்பவும் இடதுசாரிகள் வருகை என்பது நடந்திருக்கிறது. ஆனால் எந்த வகை யான இடதுசாரிகள்? இந்த முன்னேற்றங்கள் நிலைக்குமா? என்ற கேள்விகளும் உள்ளன.  பல வகைகளில் இந்த இடதுசாரிகள் வேறுபட்டவர்கள் ஆக உள்ளனர். அவர்களின் முன்னுரிமைகளும் மாறு பட்டுள்ளன. கொலம்பியா புதிய அதிபர் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர். அந்த நாடு எண்ணெய், நிலக்கரியை (40 சதவீத ஏற்றுமதி வருவாயை தருபவை) சார்ந்து இருப்பதை மாற்ற முனைபவர். சிலி அதிபர் பூர்வீக குடி யினர் நலன்,  பாலின சமத்துவம் நோக்கிய பயணத்தில் அதிகம் அக்கறை காண்பிப்பவர். அந்த நாடு டாப் 10 சதவீதம்  பேர் 60 சதவீத வருமானத்தை தம் வசம் வைத்துள்ள ஏற்றத் தாழ்வு உச்சத்தில் இருக்கிற நாடு. ஹோண்டுராசின் கவனம்  ஊழலை ஒழிப்பது ஆகும். “உலகின் கலவர நகரம்” என்று  அழைக்கப்படும் ஹோண்டுராசின் சான் பெட்ரோ சூலா  நகரத்தில் நீண்ட காலம் தொடரும் கலவரத்தை கட்டுப்படுத்து வதும் முன்னுரிமை கொண்டதாக உள்ளது. இப்படி நிறைய,  வேறுபட்ட சவால்களை புதிய இடதுசாரி அரசாங்கங்கள் எதிர் கொள்கின்றன.

ராஸ்கல்களை தூக்கி எறி !

முந்திய முதல் பத்தாண்டில் உலக நிலைமைகள் இடதுசாரிகளுக்கு சாதகமாக இருந்தன. இடதுசாரிகளின் ஆட்சிகளும் பிரேசில், அர்ஜெண்டினா, பொலிவியா, ஈக்  வடார், உருகுவே போன்ற நாடுகளில் நீண்ட காலங்கள் இருந்தன. ஆனால் இப்போதைய வெற்றிகள் வித்தியா சமான சூழலில் பெறப்பட்டுள்ளன. ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையே காரணங்களாக இருக்கின்றன. “ராஸ்  கல்களை தூக்கி எறிவோம்” என்ற கோபம் வெளிப் பட்டுள்ளது.  மறுபுறம், நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத நிலை, நிதி போதாமைகள், சிக்கலான உலக சூழல் ஆகி யன புதிய அரசுகளின் பாதையை மலர் தூவியதாக வைத்தி ருக்கவில்லை. கொலம்பியா புதிய அதிபர், பிரேசில் சிலி போன்ற நாடுகளுடன் நெருங்கி பணியாற்றுவோம் என்று அறிவித்து இருந்தாலும் தென் அமெரிக்க நாடுகளின் கூட்ட மைப்பின் (UNASUR) தோல்வி தந்த பாடங்களை மறக்க கூடாது.

என்ன செய்ய வேண்டும்?  

இரண்டாம் பனிப் போர் காலம் தனது அவலட்சண முகத்தை காண்பிக்க முனைவதால், செயலூக்கம் கொண்ட கூட்டுச் சேரா இயக்கம் குறித்த கருத்தாக்கம் விவாத களத்திற்கு வந்திருக்கிறது. நேரு காலத்திய 1950 களின்  பக்கங்களை புரட்டலாம் என்றாலும் 21 ஆம் நூற்றாண்டின் கள யதார்த்தங்களுக்கு ஏற்ப அவை பொருத்தப்பட வேண்டும். இது குறித்த கல்வி, கொள்கை உருவாக்க வட்டங்களில் நடைபெறுகிற விவாதங்கள் லத்தீன் அமெ ரிக்க நாடுகளின் வெளியுறவு கொள்கைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சக் கூடும். உலக அரங்கில் லத்தீன் அமெரிக்க நாடு கள் தங்களின் இடத்தை, தாக்கத்தை உறுதி செய்ய முடி யும்.




 

;