world

ஊதிய உயர்வைப் பெற்றுத் தந்த போராட்டம்

லண்டன், பிப்.15- அபெல்லியோ லண்டன் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதன் மூலம் நல்ல ஊதிய உயர்வைப் பெற்று சாதித்திருக்கிறார்கள். பிரிட்டனில் கடும் பொருளாதார நெருக்கடியை நடுத்தர மற்றும் ஏழை  மக்கள் சந்தித்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர் களும் போராட்டக்களத்தில் இருக்கிறார் கள். ஆனால், ரிஷி சுனாக் தலைமை யிலான அரசும், நிர்வாகங்களும் போராட் டங்களை அலட்சியப்படுத்துகின்றன. இந்நிலையில் அபெல்லியோ லண்டன் நிறு வனத்தின் ஓட்டுநர்களுக்குக் கிடைத்த  வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த பல மாதங்களாகப் போராடி வந்தனர். ஊதிய உயர்வு கோரி பல முறை வேலை நிறுத்தங்களை மேற்கொண்டனர். போராட்டங்களின் வீச்சால் இறங்கி வந்த  நிர்வாகம் ஊதிய உயர்வுக்கு ஒப்புக் கொண்டது. 1,800 ஓட்டுநர்கள் பலனடை யும் வகையிலான ஊதிய ஒப்பந்தத்தில் 18 விழுக்காடு அளவுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. பிரிட்டனில் நடை பெற்று வரும் போராட்டங்களில் இது மிகப் பெரிய வெற்றியாக உருவெடுத்துள்ளது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரி வித்த தொழிற்சங்கத்தின் செயலாளர் ஷரோன் கிரகாம், “இது ஒரு முக்கிய மான வெற்றியாகும். தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர். நமது தொழிற் சங்கத்தின் ஆதரவோடு நியாயமான ஊதிய  உயர்வை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்” என்றார். இந்த வெற்றிச் செய்தி கிடைத்த  அன்று, நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டிருந்தன. ஆசிரியர் களும் நியாயமான ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.