world

img

ஐந்தாண்டுகளாக ஒரே ஊதியமா? பொதுத்துறை ஊழியர்கள் கொந்தளிப்பு

பிரேசிலியா, ஜன.19- பணவீக்கம் அதிகரித்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட தங்களின் ஊதியம் உயர்த்தப்படாத தைக் கண்டித்து பிரேசிலின் பொ துத்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். பிரேசில் முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பிரேசிலின் மத்திய வங்கி ஊழியர் கள் சில மணி நேர வேலை நிறுத்தமே  செய்திருக்கிறார்கள். ஊழியர்களின் ஊதியம் பற்றிக் கவலைப்படாத வலதுசாரி அரசின் போக்கைக் கடு மையாகக் கண்டிப்பதாக பல்வேறு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களில் குறிப்பிட்டனர்.  செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர் சங்கங்களின் தலைவர்களில் ஒருவரான ருடினெய் மார்கஸ், “கடைசியாக ஜனவரி 2017ல் ஊதியம் உயர்த்தப்பட்டது. அப்போ திருந்து குடிமக்களின் வாங்கும் சக்தி கடுமையாகக் குறைந்துவிட்டது. தேசிய நுகர்வோர் குறியீட்டு எண் 27.2 விழுக்காட்டைத் தொட்டுள் ளது. பொதுத்துறை ஊழியர்களை மோசமாக நடத்தும் பொல்சானரோ வின் போக்கை இனிமேலும் ஏற்றுக் கொண்டிருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 21) நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஊழி யர் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஜெய்ர் பொல்சானரோ மற்றும் அவரது நிதியமைச்சர் பாவ்லோ குடெஸ் ஆகியோரின் நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தம் இருக்கும் என்று குறிப்பிட்ட ருடினெய் மார்கஸ், இவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து பிரேசிலின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

எதிர்ப்பு வலுக்கிறது

வலதுசாரி ஜனாதிபதியான பொல்சானரோவுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கருத்துக் கணிப்புகளில் 20 புள்ளிகள் பின்தங்கியுள்ளார். மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி இடதுசாரி வேட்பாளராக நிற்பார் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் ஜனாதி பதி லூலாவுக்கு ஆதரவான சூழலை உருவாக்கியுள்ளது.
 

;