world

img

உலகச் செய்திகள்

  • ஐக்கிய நாடுகள் சபையின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளுக்கான உணவு மற்றும் வேளாண்மைக்கழகத்தின் துணைத்தலைவர் பொறுப்பு நிகரகுவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் 37வது பிராந்திய மாநாட்டில் 33 நாடுகள் பங்கேற்றுள்ளன. தட்பவெப்ப நிலை மாறுதல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பது பற்றி இந்த மாநாடு விவாதிக்கிறது.
  • உக்ரைன் நெருக்கடியால் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக ஏறியுள்ளது. இதை எதிர்கொள்ள புதிய உத்தி ஒன்றை ஜெர்மனியின் பொருளாதார ஆய்வு மையம் பரிந்துரை செய்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவதே தீர்வாக இருக்கும் என்று அந்த மையத்தின் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏறியுள்ள நிலையில், அடுத்த உயர்வும் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  • புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தனது புதிய வரி வெட்டுகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பிரிட்டனின் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நடவடிக்கைகள் ஏழைகளுக்கு உதவவில்லை என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட சரிவைச் சரி செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிரிட்டனில் பணவீக்கம் 9 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருப்பதை சமாளிக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.