world

img

தீக்கதிர் உலக செய்திகள்

டுவிட்டர் எக்ஸ் பயனாளர்களுக்கு கட்டணம் 

டுவிட்டர் எக்ஸ் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனை த்து பயனாளர்களிடமிருந்தும் மாதாந்திர கட்டணம் வசூ லிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் வலைத்தளத்தை தன் வசமாக்கியது முதல் ஊழியர்கள் குறைப்பு உட்பட எலன் மஸ்க் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

நியூசிலாந்தில் நிலநடுக்கம் 

நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் 5.7  ரிக்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டின் அரசாங்கம் கூறி யுள்ளது.

ஒரே நாளில் 6 பாலஸ்தீன இளைஞர்கள் கொலை 

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன பகுதியில் அப்பாவி மக்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் செவ்வாயன்று ஒரே நாளில் ஆறு பாலஸ்தீன இளைஞர்களை கொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

சர்வதேச நீதிமன்றத்தில் சைபர் தாக்குதலா? 

கடந்த வாரம் சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்தின் தரவு தளத்தை பாதிக்கும் வகையிலான செயல்பாடு கண்ட றியப்பட்டு தடுக்கப்பட்டது என நீதிமன்ற செய்தித் தொ டர்பாளர் அப்தல்லா தெரிவித்துள்ளார். ஆனால் அது நேரடி யான சைபர் தாக்குதலா என்று உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது சைபர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் கைது : பிரான்சுக்கு கண்டனம் 

பிரான்ஸ் உளவுத்துறை மூலம் லிபிய எல்லையில் கடத்தல் காரர்களை பிடிப்பதாகக் கூறி, எகிப்து அரசு, பலரைக் கொலை செய்தது என  இரண்டாண்டுகளுக்கு முன் டிஸ்க் ளோஸ் தளத்தில் புலனாய்வு செய்தி வெளியிட்டதற்காக, அரி யன் லாவ்ரில்லெக்ஸ் என்ற  பத்திரிகையாளரை பிரான்ஸ் அரசு கைது செய்துள்ளது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.