world

img

அமெரிக்கப் பிடியிலிருந்து விலக உதவும் பிரிக்ஸ்

பெய்ஜிங், ஜூன் 28- ஐந்து நாடுகள் அமைப்பான பிரிக்ஸ் சர்வதேச கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பித்திருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற சர்வதேச கூட்டமைப்பை உரு வாக்கியுள்ளன. முதலில் நான்கு நாடு கள் இணைந்தும், பின்னர் அதில் தென் ஆப்பிரிக்காவும் சேர்ந்தது. 2009  மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நடந்த  மாநாடுகளில் நான்கு நாடுகள் மட்டுமே பங்கேற்றன. 2011 ஆம் ஆண்டில்  இருந்து தென் ஆப்பிரிக்காவும் இணைந்  தது. 2012 ஆம் ஆண்டின் கணக்கின் படி, உலக மக்கள் தொகையில் பாதி  இந்த உறுப்பு நாடுகளில்தான் இருந்தது.  பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பில் சில இடையூறுகள் இருந்து வந்தபோதிலும், அமெரிக்கா என்ற ஒற்றைத் தலைமையை நோக்கி உலகம் சென்றிருந்ததற்கு வேகத் தடை போடுவதாக பிரிக்ஸ் அமைந் தது. பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி, பிரிக்ஸ் அறிவியல் ஒத்துழைப்பு என்று அடுத்த டுத்த கட்டங்களுக்கு இந்தக் கூட்ட மைப்பு நகர்ந்தது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற கூட்டு செயல்பாடுகளை உருவாக்கலாம் என்ற விவாதங்களையும் நடத்தி யுள்ளனர்.

ஈரான்

பிரிக்ஸ் அமைப்பு குலையாமல், தங்கள் நோக்கங்களை நோக்கி முன்னேறி வருவதால் மேலும் பல  நாடுகள் இதில் ஆர்வம் காட்டத்  துவங்கியுள்ளன. இதற்கான விண் ணப்பத்தை அளித்துள்ளோம் என்று ஈரானின் வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் சயீத் கடிப்சதே தெரிவித்துள்ளார். உலகின் மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் 30 விழுக்  காட்டைக் கொண்டுள்ள பிரிக்ஸின்  மதிப்பை மேலும் அதிகரிக்கும் வகை யில் தங்கள் இணைப்பு இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே, தங்களையும் உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ளு மாறு அர்ஜெண்டினா விண்ணப்பித்தி ருக்கிறது. ஈரான் மற்றும் அர்ஜெண் டினா ஆகிய இரு நாடுகளையும் இணைத்துக் கொள்வதில் சீனாவும், ரஷ்யாவும் முனைப்புடன் உள்ளன. ‘‘ஏராளமான வாய்ப்புகளை ஏற்  படுத்தக்கூடியதாக பிரிக்ஸ் உள் ளது’’ என்று அர்ஜெண்டினாவின் ஜனா திபதி ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் தெரிவித்திருக்கிறார். மேலும், ‘‘சவூதி  அரேபியாவும் தனது விருப்பத்தைத்  தெரிவித்துள்ளது. அடுத்த உச்சி மாநாட்டில் சுமார் 12 வளரும் நாடுகள்  பங்கேற்க வாய்ப்புள்ளது’’ என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து குறைவான விலையில் எண்ணெய் வாங்க இலங்கை முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தங்கள் நாட்டு அமைச்சர்களை ரஷ்யாவுக்கு இலங்கை அனுப்புகிறது. கடந்த மாதத்தில் 90 ஆயிரம் டன் எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு பெறப்பட்டது. இதுபோன்று மேலும் எண்ணெய் வாங்கும் நோக்கத்தில் இரண்டு இலங்கை அமைச்சர்கள் ரஷ்யா செல்கிறார்கள். அவர்கள் கத்தார் நாட்டுக்கும் செல்லவிருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில் இதுவரையில் 15 பாலஸ்தீனக் குழந்தைகள் இஸ்ரேல் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெனிவா நகரில் இருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகள் பாதுகாப்புக்கான சர்வதேச மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான மேற்குக் கரை பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.
 

;