world

img

ஏழு ஆண்டுகளில் 8 ஆயிரம் குழந்தைகள் கொலை - படுகாயம்

சனா, நவ.25- ஏமன் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் போரால் கடந்த ஏழு ஆண்டுகளில் 8 ஆயிரம் குழந்தைகள் கொலையோ அல்லது படுகாயத்திற்கோ உள்ளாகியுள்ளார்கள் என்று மனித உரிமைகள் அமைப்பான என்டிசாப் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஏமனில் அமைக்கப்பட்டுள்ள அரசுக்கு எதிராக சவூதி அரேபியா மோதி வருகிறது. அவர்கள் அதி காரத்தில் வந்ததை ஏற்றுக் கொள்ளாத தோடு, முன்னாள் ஆட்சியாளரு க்கு அடைக்கலம் கொடுத்து  அவரை மீண்டும் அதிகாரத்தில் வைப்பதற்காக போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதோடு, ஏமனைச் சுற்றி வளைத்து முற்றுகை யும் செய்துள்ளது. அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை சவூதி அரேபிய ஏற்படுத்தியிருக்கிறது.

உலகக் குழந்தைகள் தினத்தை யொட்டி என்டிசாப் என்ற மனித உரிமை கள் அமைப்பு, ஏமனில் உள்ள நிலவரம் பற்றிய தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வறி க்கையின்படி, 3 ஆயிரத்து 860 குழந்தைகள் இதுவரையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் 4 ஆயிரத்து 256 குழந்தைகள் காயமடைந்தனர். ஏழு ஆண்டுகால போர் குழந்தைகளையும், பெண்களை யும் கடுமையாகப் பாதித்திருக்கிறது என்று அந்த ஆய்வறிக்கையின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உடல் ஊனமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித் துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு முன்பாக உடல் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 45 லட்ச மாக அதிகரித்து விட்டது. இதில் ஏராள மானவர்களின் ஊனத்திற்கு நேரடி காரணமாக போர் இருந்திருக்கிறது. பிரசவங்களின்போது குறித்த காலத் திற்கு முன்னதாக பிறந்த குழந்தை களின் எண்ணிக்கை 39 விழுக்காடு என்று ஆய்வறிக்கை கூறுகிறது. குழந்தைகளின் கல்வி கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 24  லட்சம் குழந்தைகள் ஆரம்பப் பள்ளி களில் இருந்து வெளியேறியுள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் சிதைந்து போயுள்ளன. இந்தப் பள்ளிக்கூடங்களுக்கு மாற்று ஏற்பாடும் இல்லை. இதனால் லட்சக் கணக்கான குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய அவல நிலை இங்கு உருவாகியுள்ளது. ஏமன் அரசின் கல்வியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடிப்படைக்  கல்வி பெறாமல் பள்ளியில் இருந்து வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தொட்டு விடும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

போரே காரணம்

வெடி பொருட்கள், குண்டுகள் மற்றும் கன்னிவெடிகள் உள்ளிட்ட வற்றால் இதுவரை 4 ஆயிரம் குழந்தை கள் கொல்லப்பட்டுள்ளன என்று என்டிசாப் தனது ஆய்வறிக்கையில் கூறி யுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் ஆறு மாத காலம் போர்  நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தக்  காலகட்டத்தில் பல முறை சவூதி  அரேபியப் படைகள் போர் நிறுத்தத்தை  மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த ஆறு மாத காலத்தில் 131 குழந்தை கள் ஏமனில் கொல்லப்பட்டிருக் கிறார்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது 80 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை என்டிசாப் மனித உரிமை அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. குழந்தைகள் முன்கூட்டியே பிறக்கும் நிலை ஒருபுறம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு, மறுபுறத்தில் போர்த் தளவாடங்கள் குழந்தைகளின் உயிரிழப்புகளுக்குக் காரணமாகி உள்ளன. சவூதி அரேபியாவின்  இந்தக் கொலை வெறிப் போருக்கு முழுமை யான ஆதரவைத் தந்து வரும் அமெரிக்காவும் இந்தக் கொலை களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்டிசாப் ஆய்வறிக்கை கோரியுள்ளது.
 

;