world

img

காலத்தை வென்றவர்கள் : கவிஞர் ஜான் கீட்ஸ் நினைவு நாள்....

ஜான் கீட்ஸ் 1795ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் பிறந்தார்.ஜான் கீட்ஸ் ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீட்ஸ் ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான் டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் மில்டன், ஷேக்ஸ்பியர் ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம்இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் To Autumn என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றது.அவர் வாழ்ந்தபோது அவருடைய படைப்புகள் பெரும்வரவேற்பை பெறாது போனாலும் அவர் இறந்த பிறகு, அவைபெரிதும் போற்றப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண் டின் முடிவில் எல்லோராலும் போற்றப்படும் ஒரு ஆங்கிலக் கவியாகப் புகழ் பெற்றார்.அவருடைய படைப்புகள் பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பாதித்துள்ளது. ஜார்ஜ் லூயிஸ்போர்க்ஸ் தனது வாழ்நாளில் கீட்ஸின் கவிதைகளைப் படித்த நாள் அன்று தான் தனக்குமுதல் இலக்கிய அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

- பெரணமல்லூர் சேகரன்

;