world

img

ஒமைக்ரான் தொற்று குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எவ்வித ஆதாரமில்லை..  கைவிரித்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்..

லண்டன் 
ஒமைக்ரான் கொரோனா தொற்று தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள இம்பிரியல் கல்லூரியின் ஆராய்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இங்கிலாந்தில் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை கொரோனா பாதித்த சுமார் 2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,"முந்தைய திரிபான டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் 5.4 மடங்கு மீண்டும் தொற்றை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட  மனிதர்களிடையே உருவான எதிர்ப்பு சக்தியை ஒமைக்ரான் குறைப்பதாகவும், டெல்டா வகையைவிட, ஒமைக்ரான் கொரோனா வைரஸ் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை" என ஆராய்சியாளர்கள் கைவிரித்துள்ளனர். 

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வறிக்கை உலக நாடுகளை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

;