world

img

இங்கிலாந்து இளவரசர் பிலிப் காலமானார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், மன்னருமான பிலிப் (99) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் விண்ட்சர் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 

பக்கிங்ஹாம் அரண்மனையின்  அறிக்கையில்   ராணியின்  பிரியமான கணவர், அவரது ராயல் ஹைனஸ் தி பிரின்ஸ் பிலிப், எடின்பர்க் டியூக் மரணமடைந்ததை  ராணி  ஆழ்ந்த துக்கத்தோடு அறிவித்துள்ளார் என கூறப்பட்டு உள்ளது.

எலிசபெத் ராணி ஆவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பை 1947 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள், எட்டு பேரக்குழந்தைகள் மற்றும் 10 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் பிலிப்பின் மறைவு குறித்து இங்கிலாந்து அரசை குடும்பத்தின் அதிகார டுவிட்டர் பக்கத்திலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இளவரசர் பிலிப் வயோதிகம் காரணமாக  கடந்த 2017ம் ஆண்டு முதல் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். அரச குடும்பத்தின் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப் என்பதுகுறிப்பிடத்தக்கது. இளவரசர் பிலிப்பின் மறைவால் ஏற்பட்ட துக்கத்தில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இங்கிலாந்து அரச குடும்பமும் இணைகிறது என்ற கூறப்பட்டுள்ளது. 
 

;