world

img

புதிய வகை வைரஸ் இளைஞர்களை எளிதில் தாக்கும்... லண்டன் தமிழ் மருத்துவர் எச்சரிக்கை

லண்டன்:
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய வகை 40 வயதுடையவர்களையும் வேகமாகவும் வலுவாகவும் தாக்கி வருவதாக லண்டன் கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர் ரிஸ்வியா மன்சூர் தெரிவித்துள்ளார்.

 அவர் அளித்த பேட்டியில், “பிரிட்டனில்தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாபுதிய திரிபு மோசமான தாக்கத்தை ஏற் படுத்தி வருகிறது. டிச.25 அன்று மட்டும் 39 ஆயிரம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 350 உயிரிழப்புகள் உள்ளன. பொதுவாக வைரஸ் என்பதுமாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்தபுதிய வகை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகவும் வலுவாகவும் பரவுகிறது. அதனால்தான் தொற்று எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் புதிய நோயாளிகளின் சேர்க்கையை சமாளிக்கும் அளவுக்கு போதுமான மருத்துவ ஊழியர்கள் இல்லை. மூன்று பேர் பார்க்கும் வேலையை ஒருவரே செய்ய வேண்டியநிலை நிலவுகிறது.”“10 நோயாளிகளை கையாளும்போது எதிர்கொள்ளும் வைரஸ் ஆபத்துகளை விட, அதிக எண்ணிக்கையிலான வைரஸ் பாதித்த நோயாளிகளை ஒரே நேரத்தில் அணுகுவதால் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும்சூழல் நிலவுகிறது. 

“அப்படியொரு சூழல் ஏற்பட்டால்நோயாளிகளை கவனிக்க மருத்துவர் களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் ““பழைய கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை எளிதாகப் பாதித்தது. ஆனால் இந்த புதிய வகை, 40 வயதளவில் இருப்பவர்களைக்கூட எளிதாக தாக்குகிறது. வைரஸ் பாதிப்பு தீவிரமானால் அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க் கப்படும் நிலையும் ஏற்படலாம்.”“கொரோனா வைரஸ் தடுப்பூசியின் வலிமை எப்படி இருக்கிறது என்பது மூன்று,நான்கு வாரங்களுக்கு பிறகே தெரிய வரும்.ஏதேனும் நாள்பட்ட பக்க விளைவுகள் வருமா என்பதை பிறகுதான் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள்.”“எனவே, தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் மற்றும் புதிய வகையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளதற்காப்பு நடவடிக்கைகளை அலட்சியப் படுத்தாமல் கடைப்பிடியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

;