world

img

தலிபான்களிடம் சிக்கியது ஆப்கானிஸ்தான்.... அமெ. ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஜனாதிபதி ஓட்டம் பிடித்தார்...

காபூல்:
“90 நாட்களில் காபூல் தலிபான்கள் வசம் சிக்கிவிடும்” என்று அமெரிக்க உளவுத் துறை கூறியதாக செய்திகள் வெளியான சில நாட்களிலேயே, நிலைமை தலைகீழாக மாறியது. 20 ஆண்டு காலமாக சில ஆயிரம் துருப்புகளின் ஆயுத பலத்தால் நிலைநிறுத்தப்பட்டிருந்த -அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருந்த மிகவும் பலவீனமான ஆப்கானிஸ்தான் அரசாங்கம், அமெரிக்கப் படைகள் கிட்டத்தட்ட முழுமையாக வாபஸ்பெற்ற நிலையில், ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் தலிபான்களிடம் வீழ்ந்தது. காபூல் தலிபான்களின் கைவசமானது. ஜனாதிபதி அஷ்ரப் கனி, ஆப்கானிய மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பினார்.

கடைசியாக எஞ்சி யிருந்த அமெரிக்க தூதரக அலுவலர் களையும், ஊழியர்களையும் ஏற்றி கொண்டு அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்றது.ஆகஸ்ட் 15 அன்று காலையில்காபூல் நகருக்குள் நுழைந்துவிட்ட தலிபான்கள் சில மணி நேரங்களிலேயே முக்கிய இடங்களை  கைப்பற்றி னர். அந்தத் தருணத்தில் அமெரிக்கஊடகங்களில் தலைப்புச் செய்தி ஓடியது: “அமெரிக்காவின் கணக்கு களை யெல்லாம் தவிடுபொடியாக்கி தலிபான்கள் ஆப்கனை கைவசப் படுத்தி விட்டனர்”.அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்குள்ளும், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள்ளும் துப்பாக்கிகள் ஏந்திய தலிபான்கள் நுழைந்தனர். ஆப்கன் அரசாங்கம் அவர்களது கைகளில்வீழ்ந்தது. இம்மாத துவக்கத்தில், ஆப்கனை விட்டு முழுமையாக அமெரிக்கப் படைகளும் அதன் தலைமையிலான நேட்டோ ராணுவப் படைகளும் வெளியேறும் என்று ஜனாதிபதி ஜோ பைடன்அறிவித்த தருணத்திலிருந்தே தலிபான்கள் தங்களது கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர். அமெரிக்க ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட சுமார்  3லட்சத்திற்கும் அதிகமான ஆப்கன் ராணுவத்தினர், தலிபான்களை நிச்சயம் எதிர் கொள்வார்கள் என்றும் ஆப்கனை அவர்களை பாதுகாப்பார்கள் என்றும் அமெரிக்கா கூறியது.

ஆனால்சில வாரங்கள் கூட அந்தப்படையால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் காபூல் மாநகரத்தைக் கைப்பற்ற தலிபான்கள் எந்த பிரத்யேக முயற்சியும் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆப்கன் படையினர் தலிபான்களை எதிர்த்து மோதலில் ஈடுபட்டதாக காபூலிலிருந்து செய்திகள் இல்லை.ஆப்கானிஸ்தானை அனாதை யாக தலிபான்களின் கைகளில் வீழ்த்திவிட்டு அமெரிக்கா சென்றிருக்கிறது என்பதே உண்மை. 2001ஆம் ஆண்டில்இதே தலிபான்களை அழிக்கப்போவ தாகக் கூறித்தான் அமெரிக்கா போர்தொடுத்தது. அந்த ஆண்டிலேயே சுமார் 2லட்சம் ஆப்கானியர்களை கொன்று குவித்தது. அதைத்தொட ர்ந்து 20 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ஆப்கானியர்கள், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டது தான் மிச்சம்.மீண்டும் தலிபான்களின் ராஜ்ஜியம்துவங்கியிருக்கிறது. “ஆப்கன் இஸ்லாமிய அமீரகம்” பிறந்துவிட்டது என்று அவர்கள் பிரகடனம் செய்திருக்கிறார்கள். தலிபான்களின் தலைவரான ஹைபத்துல்லா அகுன்ஜதா, அந்நாட்டின் தலைவராக பதவியேற்பார் என்று தெரிகிறது. காபூல் மாநகரம் பதற்றத்தின் உச்சத்தில், கையறு நிலையில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. விமானநிலையம், அங்கிருந்து வெளி யேறத் தவிக்கும் மக்களால் நிரம்பி யிருக்கிறது. ஆனால் அழைத்துச் செல்ல யாரும் இல்லை.

;