world

img

இந்தியாவுக்கு தடுப்பூசி மூலப்பொருள் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மறுப்பு....

வாஷிங்டன்:
கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவில் கொரோனா தொற்றுபரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,  மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்த தடையால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதை பாதிக்கும். இதையடுத்து, மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.  இந்நிலையில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது எனக் கூறி,ஏற்றுமதி தடையை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. 

வினோதமான பதில்
உலகில் அமெரிக்காவே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு என்றும் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட்டால் பிற நாட்டவர்களுக்கு கொரோனா பரவாதுஎன்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வினோதமாக கூறியுள்ளார். 

;