world

img

ஜம்மு - காஷ்மீரை  கவனிக்கிறதாம் அமெரிக்கா....

வாஷிங்டன்:
ஜம்மு- காஷ்மீரில் நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ்கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து காஷ்மீரில் நிலைமையை உற்று கவனித்து வருகிறோம். இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக எங்களது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.எல்லையில் நிலவும் பதற்றத்தை இரு நாடுகளும் தணிக்க வேண்டும். 2003 ஆம் ஆண்டு செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும்கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறி இரு நாட்டு எல்லையில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை நாங்கள்கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துக்கொண்டார்.

;