world

img

படைகள் வெளியேறினாலும் புதிய கூட்டமைப்பை உருவாக்கி ஆப்கனில் அதிகாரம் செலுத்தும் அமெரிக்கா.....

வாஷிங்டன்:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து புதிய ‘குவாட்’ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினாலும் அந்நாட்டுக்குள் அதிகாரம் செலுத்த இந்த புதிய கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளதாக கூறப்படு கிறது. 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் 20 ஆண்டுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து அந்நாட்டு ராணுவத்துக்கு உதவி வந்தன. இந்நிலையில் தலிபான் பயங்கரவாதி களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின.இதைத்தொடர்ந்து  ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கியதாக கூறப்படுகிறது.  ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 4 நாடுகள் இணைந்து புதிய ‘குவாட்’ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

‘குவாட்’ எனப்படுவது நான்கு தரப்பு பாதுகாப்பு கூட்டணியாகும். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை பிராந்திய இணைப்புக்கு முக்கியமானவை என்று பிராந்திய நட்பு நாடுகள் (அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான்) கருதுகின்றன. எனவே ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க பிராந்திய நட்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. 
மேலும் வளர்ந்து வரும் பிராந்திய வர்த்தகபாதைகளை திறப்பதற்கான வரலாற்று வாய்ப்பை உணர்ந்து, வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும், போக்குவரத்து இணைப்புகளை உருவாக்குவதற்கும், வணிகத்தில் இருந்து வணிக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பிராந்திய நட்பு நாடுகள் ஒத்துழைக்க விரும்புகின்றன. அதன்படி பரஸ்பர ஒருமித்த கருத்துடன் இந்த ஒத்துழைப்பின் முறைகளை தீர்மானிக்க வரும் மாதங்களில் பிராந்திய நட்பு நாடுகள் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;