world

img

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ்  தற்போதைக்கு முழுமையாக சாத்தியமில்லை

வாஷிங்டன், ஏப்ரல்.12-
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் மே 1ம் தேதிக்குள் முழுமையாக  வாபஸ் வாங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன் தற்போதைய சூலில் முழுமையாக அமெரிக்க படைகளை ஆப்கனிலிருந்து  வாபஸ் பெற இயலாது. படிப்படியாக படைகளை வாபஸ் வாங்கப்படும்  என தெரிவித்துள்ளார்.
இது அரசியல் நோக்கர்கள் மத்தியில் டிரம்பிற்கும் ஜோ பைடனுக்கும் அயலுறவு கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லை அரசியல் நோக்கர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பலர்   ''ஏகாதிபத்தியம் மீண்டும் எழுந்து தாக்குதல் தொடுக்கிறது'' என்று  விமர்சித்து வருகின்றனர்.  அமெரிக்கா தொடர்ந்து உலக போலீஸ்கரனாக மாறத்துடிக்கிறது என விமர்சித்து வருகின்றனர். 
ஆப்கானிஸ்தானில்  தற்போது சுமார் 3 ஆயிரம்  அமெரிக்க படையினர்களும், 7 ஆயிரம் நேட்டோ படையினர்களும் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா தலிபானுடன் கடந்த ஆண்டில் உருவாக்கிய உடன்படிக்கையின்படி அவர்கள் மே முதல் நாளுக்கு முன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் வழக்கம் போல் அமெரிக்கா தனது அதிகார திமிரை மீண்டும் காட்ட துவங்கியிருக்கிறது. அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும், உலக நாடுகள் மீது அது செலுத்தும் ஆதிக்கம் மாறவில்லை. அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 
 

;