world

img

11 லட்சம் அமெரிக்கர்கள் பலி

வாஷிங்டன், டிச.3- அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கிக் கலாச்சாரத்தால் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் அமெரிக்க மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்க ளில் இது அம்பலமாகியிருக்கி றது. இந்தக் காப்பகம் திரட்டி யுள்ள தகவல்களின்படி 1990 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் 11 லட்சத்து 10 ஆயி ரத்து 421 பேர் கொல்லப்பட்டுள் ளனர். 2021 ஆம் ஆண்டில்தான் அதிகம் பேர் கொலையாகியுள்ள னர்.

துப்பாக்கிச் சூடுகளில் பலி யானவர்களில் 86 விழுக்காட்டி னர் ஆண்கள் என்பது குறிப்பி டத்தக்கதாகும். “தொடர்ந்து நடைபெறும் இந்தத் துப்பக்கிச் சூடுகள் களைப்படையச் செய்கின்றன. நாம் இன்னும் அதிகக் கட்டுப்பா டுகளைக் கொண்ட துப்பாக்கிச் சட்டங்களை உருவாக்கியிருக்க வேண்டும்” என்று கடந்த வாரம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந் தார். ஆனால், தாக்குதல் நடத்தக் கூடிய துப்பாக்கிகள் வைத்துக் கொள்வதற்கு தடை விதிக்கும் மசோதா இப்போதைக்கு அமெ ரிக்க நாடாளுமன்றத்தில் நிறை வேறாது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பிரதிநிதிகளின் சபை, குடியரசுக்கட்சியின் கட்டுப் பாட்டுக்குள் செல்கிறது. இத னால் இந்த அவையில் துப் பாக்கிக் கலாச்சாரத்தை முடி வுக்குக் கொண்டு வரும் மசோதா  நிறைவேற வாய்ப்பே இல்லை.  செனட் அவையில் தங்கள் பெரும் பான்மையை ஜனநாயகக் கட்சி யினர் தக்க வைத்துக் கொண்டா லும் புதிய துப்பாக்கிக் கட்டுப்பா டுகளைக் கொண்டு வரும் மசோ தாவை நிறைவேற்றும் அளவுக்கு அவர்கள் வசம் வாக்குகள் இல்லை. இந்த மசோதாக்கள் பற்றிப் பேசிய குடியரசுக்கட்சி யைச் சேர்ந்த தெற்கு கரோலினா வின் செனட் உறுப்பினர் லின்ட்சே  கிரஹாம், “ஆயுதங்களை வைத்துக் கொள்ளும் உரிமை யைப் பலப்படுத்தும் வேலையை நாங்கள் செய்வோம்” என்று கூறியுள்ளார். 

அண்மையில் வால்மார்ட் கடை ஒன்றில் அக்கடையின் மேலாளர் திடீரென்று துப்பாக்கி யை வைத்து சுடத் தொடங்கினார். ஆறு பேர் அதில் கொல்லப்பட்ட னர். மேலும் நான்கு பேர் காயம டைந்தனர். அதற்கு சில நாட்கள் முன்பாக, ஏஆர்-15 துப்பாக்கியை ஏந்திய ஒருவர் கொலோராடோ வில் உள்ள இரவு விடுதியில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றார். மேலும் 19 பேர் காயமடைந்தனர். இந்நிலையில்தான் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்ப கத்தின் புள்ளிவிபரங்கள் வெளி யாகியுள்ளன. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் துப்பாக்கிச் சூடுகள் அதிகரித்தன. பொருளாதார நெருக்கடி, மனநல பாதிப்பு மற்றும் துப்பாக்கிகளின் விற் பனையில் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கொலைகளும் அதிகரித்துள்ளன என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்க ளில் ஒருவரும், ஹார்வார்டு மருத் துவப் பள்ளியின் இணைப் பேராசிரியருமான எரிக் ஃப்ளீக் லெர் கூறியுள்ளார். பாதிக்கப் படுபவர்களில் கறுப்பர்கள் அதிகம் என்றும் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

உரிமையாளர்கள் அதிகரிப்பு

அமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர் தனிப்பட்ட முறையில் ஒரு துப்பாக்கியை வைத்திருக்கிறார் என்று பியூ ஆய்வு மையம் தெரி விக்கிறது. உலகிலேயே அதிக மாகத் துப்பாக்கி உள்ள நாடும் அமெரிக்காவாகவே இருக்கி றது. அமெரிக்காவில் மட்டும் 40 கோடி துப்பாக்கிகள் உள்ளன. காவல்துறை, ராணுவம் மற்றும் பொது மக்கள் கைகளில் இந்தத் துப்பாக்கிகள் இருக்கின்றன. இவற்றில் 39 கோடியே 30 லட்சம் துப்பாக்கிகள், அதாவது 98 விழுக்காடு, பொது மக்கள் வசம்தான் உள்ளன. இந்த எண்ணிக்கை ஒவ் வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெருந் தொற்றுக் காலத்தில் புதிதாக 75 லட்சம் துப்பாக்கி உரிமையா ளர்கள் உருவானார்கள். இதற்கு முன்பாக துப்பாக்கி இல்லாமல் இருந்த வீடுகளில் 54 லட்சம் வீடுகளில் தற்போது துப்பாக்கி கள் உள்ளன. இதன்படி பார்த்தால் புதிதாக 1 கோடியே 60 லட்சம் மக்கள் புதிதாக துப் பாக்கிக் கலாச்சாரத்திற்குள் சிக்கியுள்ளனர். நடப்பாண்டின் 11 மாதங்க ளில் 618 துப்பாக்கிச்சூடுகள் இது வரையில் நடந்துள்ளன. துப்பாக்கிச் சூடுகளில் மக்கள் உயிரிழப்பது தொடர்ந்தா லும், துப்பாக்கித் தயாரிப்பா ளர்கள் சட்டத்தால் பாதுகாக்கப் பட்டுள்ளனர். தங்கள் உறவு களை இழந்து துக்கத்தை மக்கள் அனுசரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், துப்பாக் கித் தயாரிப்பாளர்கள் தங்கள் உற் பத்தியிலும், விற்பனையிலும் சாதனை படைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

 

;