world

img

நைலான் முகக்கவசம் 80% செயல்திறன் கொண்டது.... விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு....

நியூயார்க்:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நைலான் முகக்கவசம் 80 சதவீத செயல்திறன் கொண்டது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனா வைரசுக்கு எதிரான கருவிகள், முகக் கவசங்கள் பற்றி அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர் ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்த ஆராய்ச்சி முடிவுகளை அவர்கள் ஜாமா உள்மருத்துவ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

அதில், கொரோனா வைரஸ் காலத்தில் பல புதுமையான கருவிகள், முகக் கவசங்கள் வந்துள்ளன, ஆனாலும் சில முகக்கவசங்கள்தான் வான்வழி துகள்களை வடிகட்டுவதில் நேர்த்தியானதாகவும், நல்ல செயல்திறன் மிக்கதாக உள்ளன. அறுவை சிகிச்சை முக கவசங்கள் 38.5 சதவீத வடிகட்டும் செயல்திறனை கொண்டுள்ளன; அதே நேரத்தில் அவற்றை முறையாக காதுகளில் அணிந்து இறுக்கமாக இருந்தால் அவை 60.3 சதவீதம் அளவுக்கு செயல்திறனை கொண்டிருக்கும். 2 அடுக்குகளை கொண்ட நைலான் முகக் கவசங்கள் 80 சதவீத செயல்திறனை வழங்கும். என் 95 ரெஸ்பிரேட்டர் முக கவசங்கள் அதிகபட்சமாக 90 சதவீதம் வரை பாதுகாப்பை தரும் என்று தெரிவித்துள்ளனர்.

;