world

img

அமெரிக்காவை உலுக்கிய சுரங்கத் தொழிலாளர்கள்....

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் புருக்வுட் நகரில் வாரியர் மெட்கோல் எனும் சுரங்க கார்ப்பரேட் கம்பெனியை எதிர்த்து அந்நிறுவனத்தில் பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த 4 மாத காலமாக நடத்தி வந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வருகிறது. 

கடந்த ஏப்ரல் 1 முதல் இவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். திடீரென இத்தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 6 டாலர் என்ற அடிப்படையில் கூலியை வெட்டுவதாக நிறுவனம் அறிவித்ததை எதிர்த்து கொந்தளிப்புடன் வேலைநிறுத்தம் துவங்கியது.

தொடர் போராட்டம் நடைபெற்ற போதிலும் நிர்வாகம் கீழே இறங்கி வர மறுத்தது. எனினும் இடைவிடாமல் நிறுவனத்தின் தலைமையக வாயிலில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர்.
மேற்கண்ட நிறுவனம் பிளாக்ராக் எனப்படும் மற்றொரு கார்ப்பரேட்டுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. 9 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் = 1 லட்சம் கோடி) முதலீடுகளையும் 75லட்சம் பங்குகளையும் கொண்டிருக்கிற இந்த நிறுவனம் தனது தொழிலாளர்களை சுரண்டிக் கொழுத்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு லாபம் குறைந்துவிட்டதாகக் கூறி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்திருக்கிறது. அதை எதிர்த்தே பெரும் போராட்டம் எழுந்தது.நான்கு மாதப் போராட்டத்திற்குப் பிறகு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இப்போதுதான் வால்ஸ்ட்ரீட் கார்ப்பரேட் பெருமுதலாளிகள் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

;