world

img

முஸ்லிம்களுக்கான தடை நீக்கம்... பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் இணைவு.... அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்....

வாஷிங்டன்:
முஸ்லிம்களுக்கான  தடை நீக்கம், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில்  இணைவது, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைதல், சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குதல், மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணியை உடனடியாக நிறுத்துதல்  உள்ளிட்ட  15 முக்கிய உத்தரவுகளில்  புதிய பதவியேற்றுள்ள அமெரிக்கஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

வாஷிங்டனில் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல்வேறு நிர்வாகரீதியிலான உத்தரவுகளில் கையொப்பமிட் டது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இதுவெறும் தொடக்கம்தான். நான் பிரச்சாரத்தில் மக்களிடம் கூறியதை நிச்சயம் நிறைவேற்றுவேன். நடுத்தர மக்கள் நலனுக்காக அரசு இயங்கும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்துவேன். இவைதடை உத்தரவுகள் மட்டும்தான். இதற்கான சட்டமசோதா கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். அடுத்தடுத்து வரும் நாட்களில் பல்வேறு உத்தரவுகளை நான் பிறப்பிக்க இருக்கிறேன்.அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 100 நாட்களுக்கு மக்கள்கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்எனும் உத்தரவில் முதலில் கையொப்ப மிட்டேன். அதைத்தொடர்ந்து பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது, அமெரிக்காவில் இனவேறுபாடு இன்றி மக்களுக்கு சமஉரிமை அளித்தல் போன்ற உத்தரவுகளையும் பிறப்பித்துஉள்ளேன் என்று தெரிவித்தார்.

;