world

img

ஒமிக்ரானை தொடந்து தற்போது டெல்மிக்ரான் என்கிற திரிபு பரவுவதாக தகவல்

தமிழக வனப்பகுதியில் சுமார் 4200 யானைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மைய அலுவலகத்தில் யானைகள் வழித் தடங்களை பாதுகாப்பது பற்றிய கருத்தரங்கம் புதனன்று மாலை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் யானைகளின் வழித்தடங்களை பாதுகாப்பது பற்றி மனித விலங்கு மோதல் தடுப்பது பற்றியும் விரிவாக பேசப்பட்டது

மேலும், இந்தியாவைப் பொருத்தவரை 101 யானை வழித்தடங்கள் உள்ளன அதில், தமிழ்நாட்டில் 16 யானைகள் வழித்தடங்கள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்திலிருந்து சாப்டூர் அருகே உள்ள கோட்டை மலை வரை ஒரு யானைகள் வழித்தடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக வனப்பகுதியில் 4200 யானைகள் இருப்பதாகவும்,மேலும் இந்தியாவில் சுமார் 21,000 யானைகள் இருப்பதாகவும் கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது

இந்த கருத்தரங்கில், ஐயுசிஎன் என்ற அமைப்பை சேர்ந்த விவேக் மேனன் மற்றும் திருவில்லிபுத்தூரில் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் டாக்டர் திலிப் குமார் வைல்டுலைஃப் டிரஸ்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சந்திப் மற்றும் மதுரை ஐகோர்ட் வழக்கறிஞர் அழகுமுத்து ராஜபாளையம் வன உயிரின ஆர்வலர் சுப்ரமணியராஜா வன விரிவாக்க மைய அலுவலர் பால்பாண்டியன் திருவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் பொறுப்பு செல்லமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

;