world

img

617 உருமாறிய கொரோனா வைரஸ்களை இந்திய தடுப்பூசி அழிக்கிறது....   அமெ. மருத்துவ வல்லுநர் தகவல்.....

வாஷிங்டன்:
இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும்  உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.இதனை அழிக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியானது, 617 உருமாறிய கொரோனா வைரஸ்களை அழித்திருப்பது தெரியவந்துள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொற்றுநோய் வல்லுநர் டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  ‘தொற்று நோய் குறித்து நாம் தினசரி தரவுகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம். அவ்வகையில், இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியால் குணமடைந்த நோயாளிகள் மற்றும் அந்த தடுப்பூசி பெற்றவர்களின் தரவுகளை ஆய்வு செய்தோம். இதில், கோவேக்சின் தடுப்பூசி 617 உருமாறிய வைரஸ்களை அழித்தது கண்டறியப்பட்டது. எனவே, இந்தியாவில் தற்போது நாம் காணும்உண்மையான நிலை, கடும் சிரமமாக இருந்தபோதி லும், தடுப்பூசி போடுவதே தீர்வாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

;