india

img

பல கொரோனா வைரஸ்களை  கோவாக்சின் தடுப்பூசி அழிக்கிறது...

புதுதில்லி:
பல்வேறு வகை கொரோனா வைரஸ்களையும், இரட்டை நிலை உருமாறிய கொரோனா வைரசையும் கோவாக்சின் தடுப்பூசி அழிப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. தற்போது  கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம்  நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிலையில், பல்வேறு வகை கொரோனா வைரஸ்களையும், இரட்டை நிலை உருமாறிய கொரோனா வைரசையும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி அழிக்கிறது. சார்ஸ் - கோவி 2 உள்ளிட்ட இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் கோவாக்சின் தடுப்பூசிக்கு உள்ளது என்று நாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது.

;