world

img

நாசாவின் ஜேம்ஸ் வெப் சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்!  

'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தை அற்புதமாக படம் பிடித்திருப்பதை நாசா நேற்று வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பா, கனடா விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலைநோக்கியை ரூ.79.6 ஆயிரம் கோடியில் நாசா உருவாக்கியது.  இந்த தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து மொத்தம் 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது.  பூமியிலிருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.  

இதன் மூலம், முதல் படமாக செவ்வாய்க்கிழமை வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பதிவான 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தின் பால்வெளி திரள்களில் சிதறிகிடந்த ஒளிகளை ஒன்றிணைந்து புதிய வண்ணப்புகைப்படத்தை வெளியிட்டது. 

பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனதால் தொலைநோக்கியில் 13 பில்லியன் ஆண்டுகள் வரையிலான கதிர்கள் பதிவாகி உள்ளதால் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் ஆரம்பம் எப்படி இருக்கும் என்பதை நெருங்கிவிட்டோம் என பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இதையடுத்து நாசா மேலும் சில அற்புதமான படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இந்நிலையில், உலகையே திரும்பி பார்க்க வைத்த நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கியின் சாதனையை சிறப்பிக்கும் விதமாக இன்றைய கூகுளின் முகப்புப் பக்கத்தில் டூடுள் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.