world

img

கொரோனா வைரசை கண்டறிந்து எச்சரிக்கும் நவீன முகக் கவசம் தயாரிப்பு....

வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தாக்கத்திலி ருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும்முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மூலிகை முகக் கவசம், துணியால் ஆன முகக் கவசம், பிளாஸ்டிக் முகக்கவசம் என பல வகை முகக்கவசங்கள் விற்பனையாகின்றன. 

முகக் கவசங்களுடன் வை-பை, புளூடூத், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை இணைக்கும் தொழில்நுட்ப ரீதியான முகக் கவசங்கள் ஜப்பான் உள்ளிட்ட ஆசியநாடுகளில் விற்பனையாகி வருகின்றன.தற்போது விஞ்ஞானிகள் வித்தியாசமான, தொழில்நுட்பம் நிறைந்த அதிநவீன முகக்கவசம் ஒன்றை தயாரித்துள்ளனர்.  முகக்கவசம் அணிந்தவரிடம் 90 நிமிடங்களுக்குள் கொரோனா வைரசை கண்டறியக்கூடிய ஒரு புதிய முகக்கவ சத்தை, மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

ஆரம்ப சோதனைகளில் இந்த முகக்கவசம் மிகவும் துல்லியமான முடிவுகளை அளித்துள்ளது. இது தற்போதைய பி.சி.ஆர் சோதனைகளுடன் ஒப்பிடக் கூடியதாக உள்ளது. சென்சார்களை சோதனை செய்ய விரும்பும்போது, அணிபவர்களால் செயல்படுத்தப் படும் வகையில் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. பயனர்களின் தனியுரிமைக்காக முகக்கவசத்தின் உட்புறத்தில் மட்டுமேமுடிவுகள் காண்பிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;