world

img

காலத்தை வென்றவர்கள் : கம்யூனிஸ்ட் ஓவியர் பிரிடா காலோ நினைவு நாள்....

இவரது குழந்தைப் பருவம் போலியோவால் முடக்கப்பட்டது. மேலும் இவரது பதினெட்டு வயதில் மோசமான ஒரு விபத்தில் காயமடைந்தார். இதனால் இவர் தன் வாழ்நாள் முழுவதும் வலி மற்றும் மருத்துவ சிக்கல்களை எதிர்கொண்டார். விபத்துக்கு முன்னர், இவருக்கு மருத்துவக் கல்லூரியின் தலைமையால் மருத்துவக் கல்விக்கு உறுதியளிக்கப்பட்ட மாணவியாக இருந்தார். ஆனால் அதன்பிறகு உயர் கல்வியை கைவிட வேண்டியிருந்தது. கலையானது இவரது குழந்தை பருவத்தில் பொழுதுபோக்காக இருந்தது என்றாலும், காலம் செல்லச்செல்ல தான் ஒரு கலைஞராக மாறுவதை  உணர ஆரம்பித்தார்.  மேலும் இவர் அரசியலில்ஆர்வம் கொண்டு, 1927 ஆம் ஆண்டு மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சி மூலம், சுவர்ச் சிற்பியான டியாகோ ரிவேராவைச் சந்தித்தார். அவர்கள் 1928 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே அரசியல் பார்வையைக் கொண்டிருந்ததோடு, ரிவேரா, காலோவின் ஓவிய முயற்சிகளுக்கு உற்சாகமும் கொடுத்து வந்தார்.

இவரது ஓவியங்கள் சர்ரியலிஸ்ட் கலைஞரான ஆண்ட்ரே பிரெட்டரின் ஆர்வத்தைத் தூண்டியது, இதனால் 1938 இல் நியூயார்க்கில் உள்ள ஜூலியன் லெவி கேலரியில் காலோவின் ஓவியங்களை மட்டுமே கொண்ட தனியான ஒரு ஓவியக் கண்காட்சிக்கு ஆண்ட்ரே பிரெட்டரின் ஏற்பாடு செய்தார். கண்காட்சி வெற்றிகரமானதாக ஆனது. 1939 இல் பாரிஸ் நகரில் அடுத்தடுத்த கண்காட்சிநடந்தது. 1940 களில், காலோ மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிலும் கண்காட்சிகளில் கலந்துகொண்டார். ஓவியப் பள்ளியில் கற்பிக்க தொடங்கினார். 1953 இல் மெக்சிகோவில் அவரது முதல் தனி கண்காட்சி நடந்தது.இறுதியில் 1954 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 13 ஆம் நாளன்று மரணித்தார்.

;