world

img

1982க்கு திரும்பிய அமெரிக்கா

அமெரிக்கா கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வரும் நிலையில், நுகர்வோர் விலை குறியீடு 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு மேசமான நிலையை எட்டியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி நிறுவனமாக ஏபிசி நிறுவனம் அந்நாட்டு மக்களிடம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளை ஞாயிறன்று வெளியிட்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலான அமெரிக்கர்கள் ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது, 69 சதவிகித அமெரிக்கர்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஜோ பைடன் அரசு உருப்படியான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, அவர் சார்ந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 54 சதவிகித உறுப்பினர்களே ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது தங்களது அதிருப்தியை கொட்டியுள்ளனர். இதேபோல் குடியரசு கட்சியைச் சேர்ந்த 94 சதவிகிதம் பேரும், இரு கட்சிகளையும் சாராத 71 சதவிகிதம் பேரும் ஜோ பைடன் நிர்வாகம் குறித்து கடுமையாக சாடியுள்ளனர்.  

இதற்கிடையே, அமெரிக்காவின் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக நுகர்வோர் விலை குறியீடு என்பது 6.8 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 1982 ஆம் ஆண்டிற்கு பிறகு எட்டிய மிக மோசமான உச்சபட்ச பணவீக்கமாகும். இதன்காரணமாக அந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் பெடரல் வங்கியானது எதிர்வரும் புதிய ஆண்டில் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்த துவங்கும் என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.   

;