world

img

அமெரிக்காவில் முதல் பறக்கும் பைக் அறிமுகம்

அமெரிக்காவில் முதல் பறக்கும் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஜப்பானில் செயல்பட்டு வரும்  ஏர்வின்ஸ் டெக்னாலஜி நிறுவனம் XTURISMO என்ற புதிய வகை பறக்கும் பைக்கை தயாரித்துள்ளது. ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த  ஹோவர் பைக் 300 கிலோ எடை கொண்டது. பைக்கின் முன்னும் பின்னும் இரண்டு பெரிய பேன்களும் 4 புறத்திலும் சிறிய பேன்களும் உள்ளது. வழக்கமான எரிபொருளில் இயங்கும் எஞ்ஜின் கொண்ட இந்த பைக்கில் 4 பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன. இந்த பைக் மணிக்கு 62 மைல் தூரத்திற்கு செல்லும். தொடர்ச்சியாக 40 நிமிடம் பயணிக்கும் திறன் கொண்டது 

சுமார் ரூ. 6 கோடி இந்திய மதிப்பிலான இந்த பைக் தற்போது அமெரிக்காவில் நடைபெறும் டெட்ராய்டு ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என ஏர்வின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

;