world

img

நடுக்கடலில் இறங்கிய அமெரிக்க சரக்கு விமானம்....

வாஷிங்டன்:
நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடலில் இறங்கியது.  

ஹொனொலுலுவில் இருந்து மாவி எனும் தீவைநோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தச் சரக்கு விமானம்டேனியல் கே இன்னாவே சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே கடலுக்குள் இறங்கியது.உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 1:33 மணிக்கு இந்தவிபத்து நடந்தது என்றுபிளைட்ரேடார்24 (flightradar24) இணையதளம் தெரிவிக்கிறது. விமானத்திலிருந்த இரு விமானிகளையும் கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.அவர்களில் ஒருவர் விமானத்தின் வால் பகுதியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்ததாகவும், அவர் மீட்பு விமானம் ஒன்றின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்றும் மற்றவர் தலையில் காயத்துடன் படகு மூலம் மீட்கப்பட்டார் என்று அந்த ஊடகம் தெரிவிக்கிறது.அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் நேஷனல் டிரான்ஸ்போர்ட் சேஃப்ட்டி போர்டு ஆகிய இரண்டு அமைப்புகளும் இந்த விமான விபத்து குறித்துவிசாரிக்க உள்ளன.

எஞ்சின் பழுதடைந்து இருந்ததாக விபத்துக்குள்ளான விமானத்தின் விமானிகள் தெரிவித்திருந்தனர். அதனால் ஹொனோலுலுவுக்குத் திரும்ப அவர்கள் முயற் சித்துக் கொண்டிருந்த பொழுது, அந்த விமானத்தைகடலில் இறக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது என்றுபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;