நூற்றாண்டுகள் கடந்த பிரச்சனை
ஒகினாவா தீவுகள் நீண்டகால மாகவே பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. ரியுகஸ் என்ற சுதந்திர நாடாக அது இருந்து வந்தது. 1878 ஆம் ஆண்டில் இதை ஜப்பான் இணைத்துக் கொண்டது. இரண்டாம் உலகப் போர் நிறைவு பெறும் சமயத்தில் சண்டை நடந்து கொண்டிருந்த ஒரே இடமாக ஒகினாவா இருந்தது. ஜப்பா னின் மற்ற பகுதியெல்லாம் இறையாண்மை பெற்றவையாக மாறி, 20 ஆண்டுகள் கழித்துதான் இந்தத் தீவுகளுக்கு இறை யாண்மை கிடைத்தது. ஆனால், அப்போதி ருந்து அமெரிக்காவின் படைத்தளங்கள் ஆக்கிரமிப்பது தொடர்கிறது.
டோக்கியோ, அக்.3- ஜப்பான், ஒகினாவா தீவுகளில் உள்ள ஹெனோகோ மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அமெரிக்க ராணுவத் தளத்திற்கு எதிரான போராட்டம் 3 ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. தற்போது அமெரிக்கா அமைக்க விரும்பும் படைத்தளத்திற்காக மண்ணைக் கொட்டும் பணியை ஜப்பான் தொடங்குகிறது. படைத்தளங்களுக்கு உறுதியான அடித்தளம் தேவைப்படும். அந்தப் பணியை ஜப்பான் தனது செலவில் செய்யப் போகிறது. ஏற்கனவே ஜப்பானில் இருக்கும் அமெரிக்கப் படைகளுக்காக “கருணை பட்ஜெட்” என்ற ஒன்றின் மூலமாக ஜப்பான் கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி வருகிறது. அமெரிக்காவின் படைத்தளம் அமைவது இறையாண்மையைப் பறிப்பது என்பதைத் தாண்டி, சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளை விக்கும் திட்டமாக வல்லுநர்கள் பார்க்கிறார்கள். தீவுப்பகுதியில் உள்ள பவளப்பாறைகள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சொத்துக் கள் அழிவதற்கு வழிவகுக்கும் என்பது அவர் களின் கருத்தாக உள்ளது. ஜப்பானின் பிரதான நிலப்பகுதியில் எங்கும் வைக்க முடியாததா லும், அங்குள்ளவர்கள் நிராகரித்ததாலும் ஒகி னாவாவில் இந்த ராணுவப் படைத்தளத்தை அமைக்கப் போகிறார்கள்.
ஒகினாவா மாகாணத்தில் ஏற்கனவே 25 ஆயிரம் அமெரிக்கப் படை வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர். ஒட்டுமொத்த ஜப்பானில் உள்ள அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கையில் இது பாதியாகும். இங்குள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஜப்பானிய சட்டங்கள் எதுவும் பொருந்தாது. அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் மற்றும் வழக்குகள் அனைத்தும் அமெரிக்க சட்டங்களின்படியே, அதுவும் அமெரிக்கர்களால் மட்டுமே விசாரிக்கப்படும். இதுவரையில் குற்றங்கள் செய்த அமெரிக்கப் படைவீரர்கள் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. அமெரிக்கப் படைத்தளங்களுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் ஒகினாவா வில் நடந்து வருகின்றன. தேர்தல்களில் படைத் தளங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்ப வர்களே வெற்றி பெறுகிறார்கள். அண்மையில் நடந்த பல்வேறு கட்டத் தேர்தல்களில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியும், அதன் கூட்டாளியான கொமேய் கட்சியும் படுதோல்வி யைத் தழுவின.
3 ஆயிரம் நாட்கள்
பல வடிவங்களில் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்த மக்கள், தற்போது படைத்தளம் அமையும் இடத்திற்கு அருகில் அமர்ந்து போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டம் தொடங்கி 3 ஆயிரம் நாட்களைத் தாண்டி விட்டது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தலைநகர் டோக்கியோவிலும், ஒகினாவா மாகா ணத்தில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 3 ஆயிரம் நாட்களைக் கடந்த இந்தப் போராட்டத் திற்கு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. “போர் வேண்டாம்”, “ஏகாதிபதியத்தியமே வெளியேறு”, “அமெரிக்கப் படைகள் வெளி யேற வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் போராடும் மக்களின் கைகளில் உள்ளன. முன்னாள் ஆளுநரின் புதல்வரும், தற்போது மாகாண அவை உறுப்பினராகவும் உள்ள டாகேஹாரு ஓனகா, “ஜப்பானின் பிரதான நிலப்பகுதிக்கான ஒகினாவா மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று இன்றும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்தப் பிரச்ச னை குறித்து ஜப்பானின் அனைத்துப்பகுதி மக்களும் சிந்திக்க வேண்டும். இது ஒகினாவா தீவுகளுக்கான பிரச்சனை மட்டுமல்ல என்பதை அவர்கள் உணர்வது அவசியம்” என்றார்.