world

img

ட்விட்டர் ப்ளு டிக் கணக்குகளுக்கு மாதம் ரூ.660 கட்டணம்: எலான் மஸ்க் அறிவிப்பு!

ட்விட்டர் ப்ளு டிக் கணக்குகளுக்கு மாதம் ரூ.660 கட்டணம் செலுத்த வேண்டுமென எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் பயனர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளு டிக் வசதிக்கு மாதந்தோறும் ரூ.1,600 வசூலிக்க  ட்விட்டர் நிறுவனம்  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இனி மாதம் ரூ.660(8 டாலர்) கட்டணம் செலுத்த வேண்டும் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் அதிரடியாக சில மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் ட்விட்டரில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ப்ளு டிக் முறைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆலோசிக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், அந்த வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ’ப்ளு டிக்’ வசதிக்கு மாதந்தோறும் ரூ.1,600 வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளு டிக் வசதிக்கு மாதந்தோறும் ரூ.600(8 டாலர்) வசூலிக்கப்படும், நீல நிற டிக்கிற்கு கட்டணம் இல்லை என அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.

தற்போது நீலநிற டிக்கிற்கு கட்டணம் இல்லை. கூடுதல் ஆவணங்களுடன் அனைத்து பயனர்களுக்கும் ட்விட்டர் வழங்கும் சர்பார்ப்பு படுவத்தை பயனர்கள் நிரப்ப வேண்டும். இதைத் தொடர்ந்து, ட்விட்டரில் உள்ள பிரத்யேக சர்பார்ப்புக் குழு பயனர் சமர்பித்த அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, சர்பார்ப்பு அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்பதைத் தெரிவிக்கும்.

ப்ளு டிக் சரிபார்ப்புக்கான புதிய விலை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை எலான் மஸ்க் இன்னும் அறிவிக்கவில்லை.ரூ.600 கட்டணத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் வழங்கப்படும் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.