world

img

அமெரிக்கா: 2 போர் விமானங்கள் நடு வானில் மோதி விபத்து - 6 பேர் பலி?

அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த சாகச நிகழ்ச்சியில் போது இரண்டு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் போயிங் பி-17  மற்றும் பெல் பி-63 கிங்கோப்ரா விமானங்கள், விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தன அப்போது,  இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் தரையில் விழுந்து நொறுங்கியது. பின்னர் தீப்பிடித்து, வானில் கரும்புகை எழுந்தது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் ட்விட்டரில்  "விடியோ பதிவுகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. விமானத்தில் இருந்த விமானிகளின் 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு படையினர் ஆதரவுடன் விபத்துக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.