சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய மர்மமான ட்ரோஜன் விண்கற்களுக்கு நாசா விண்கலத்தை அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவானதைப் பற்றி அறியும் வகையில் அடுத்த மாதம் வியாழனன்று மர்மமான ட்ரோஜன் விண்கற்களுக்கு, நாசா விண்கலத்தை அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ட்ரோஜன் விண்கற்கள் சூரியனை இரு பட்டைகளாகச் சுற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள நாசா, இந்த விண்கற்களை ஆராய்வதன் மூலம் 4.5 பில்லியின் ஆண்டுகளுக்கு முன் சூரியக் குடும்பம் உருவானதை அறிய முடியும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இதற்காக லூசி எனப் பெயரிடப்பட்ட விண்கலத்தை அடுத்த மாதம் 16 ஆம் தேதி அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.