சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான சிரியாவில் பசர் அல் அஸாத் அரசிற்கு எதிராக பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர் போரை நடத்தி வருகின்றனர். இதில் சமீபகாலமாக அரசு படை பெரும் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பயங்கரவாதிகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இதன்காரணமாக கடும் எரிச்சலடைந்துள்ள பயங்கரவாத அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சிரியாவின் கிழக்கு மாகாணமான டயர் அல் ஜரில் உள்ள எண்ணெய் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் வியாழனன்று ஒரு பேருந்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அப்பேருந்தை ஆயுதங்களோடு வழிமறுத்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தத் துவங்கினர். இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர், ஏராளமான தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.