world

img

இலங்கை ஜனாதிபதி யார்? 2-ஆம் வாக்கு எண்ணிக்கை

இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறாததால், 2-ஆவது வாக்குகள் எண்ணிக்கை நடக்க உள்ளது.

வாக்காளர்கள் தங்களின் 2-ஆவது விருப்பமாக தேர்வு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.முதல் சுற்றில் முதல் 2 இடங்களை பெற்ற வேட்பாளர்களை தவிர பிறர் 2-ஆம் சுற்றில் நீக்கப்படுவார்கள்

முதல் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அனுர திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்த வாக்குகள் மட்டுமே 2ஆவது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்படும் இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்

இலங்கை ஜனாதிபதி தேர்தலை பொருத்தவரை ஒரு வாக்காளருக்கு மூன்று வாக்குகள் உண்டு. அது 1,2,3 என குறிப்பிடப்படுகிறது. ஒருவர் தனது வாக்கை முதல் விருப்பம், இரண்டாம் விருப்பம், மூன்றாம் விருப்பம் என மூன்று பேருக்கு வாக்களிக்கலாம். அதே வேளை ஒருவருக்கே மூன்று வாக்குகளையும் அளிக்க முடியாது. மூன்று வாக்குகளையும் கட்டாயம் அளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. முதல் வாக்கை ஒருவருக்கு மட்டும் கூட அளிக்கலாம்.இவ்வாறான முதற்கட்ட வாக்களிப்பில் 50% க்கு மேல் பெறுபவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.அவரும் 50% மேல் பெறாத பட்சத்தில் , பதிவான 2-ஆம், 3-ஆம் நிலை விருப்ப வாக்குகள் கருத்தில் கொள்ளப்படும். முதல் வாக்கில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களை தவிர மற்றவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுகளில் பதிவான 2-ஆம், 3-ஆம் விருப்ப வாக்குகளில் இருந்து, இரண்டாம் கட்டப் போட்டியில் உள்ள இரண்டு வேட்பாளருக்கு உரிய வாக்குகள் எண்ணப்பட்டு அவை முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு, அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இருவரும் சமமான வாக்குகள் பெறும் பட்சத்தில் திருவுளச்சீட்டு மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.