world

img

இலங்கை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்-காவலர்களை கைதுசெய்ய உத்தரவு  

இலங்கை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் காவலர்களை கைது செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருட்கள் அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இதையடுத்து, எரிபொருட்களின் விலை பெட்ரோல் ரூ.254-க்கும், டீசல் ரூ.220-க்கும் விற்கப்படுகிறது. இதனை கண்டித்து ரம்புக்கனை என்ற இடத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் காவல்துறையினர் கலைத்தனர்.  

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடந்த 19 ஆம் தேதி தகவல் வெளியானது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான காவலர்களை கைது செய்து ஆஜர்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உயிரிழந்தவர், காயமடைந்தவர்களின் உடலில் ஏற்பட்ட காயங்கள் துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்டது என உறுதியானது.