world

img

இலங்கை ஜனாதிபதி ஆகிறார் அனுர குமார திசநாயகே

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இலங்கையில் நேற்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன் இறுதி முடிவுகள் இன்று மதியத்துக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுர குமார திசநாயகே-வின் மக்கள் விடுதலை முன்னணி கட்சி மார்க்சிய, லெனினிய, பொதுவுடைமைக் கொள்கைகளை அடிப்படைக் கொள்கை பின்பற்றி வருவதாக கூறுகிறது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியானது 27 சிறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, என்பிபி (National Peoples Power) என்ற தேசிய மக்கள் இயக்கத்தை உருவாக்கிய நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திசநாயகே போட்டியிட்டார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இரண்டாவது இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நீடிக்கிறார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கே 3-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.