உக்ரைன் - ரஷ்யா போரை உச்சக்கட்டத்திற்கு நகர்த்தும் நேட்டோ
பேச்சுவார்த்தைக்கும் முட்டுக்கட்டை
மாஸ்கோ, செப்.13- ரஷ்யா-உக்ரைன் போரை நேட்டோ கூட்டமைப்பு உச்சக்கட்டத்திற்கு நகற்றி யுள்ளது. மேலும் போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டைகளையும் உருவாக்கியுள்ளன. ரஷ்யாவும் போர் நிறுத்தத்திற்காக உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை கள் நடத்துவதற்கு சாத்தியம் உள்ளது. எனினும் ஐரோப்பா அதற்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பா ளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றம் சாட்டியுள் ளார். மேலும் பேச்சுவார்த்தை நிறுத்தப்படு வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலும் நேட்டோ நாடுகளின் எல்லை யின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாது காப்போம் என அறிக்கை வெளியிட்டுள் ளது. போர் மற்றொரு தீவிர நிலைமைக்கு செல்லுமோ என அச்சத்தை உருவாக்கி யுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் சமீப நாட்க ளாக அதிகளவிலான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் இன் எல்லையில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் எல்லைக் குள் சென்றதாக மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேட்டோ உறுப்பு நாட்டின் எல் லைக்குள் ராணுவ அச்சுறுத்தல் ஏற்படும் போது, அச்சுறுத்தலுக்கு காரணமான நாட்டின் மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. ஒரு புறம் அமெரிக்கா, உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த பேச்சுவார்த்தை களை முன்னெடுத்தாலும் மறுபுறம் நேட்டோ நாடுகளிடம் ஆயுதங்களை விற் பனை செய்து அந்நாடுகள் மூலமாக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற வுடன் போரை நிறுத்துவதற்காக ரஷ்யா வுடன் நெருக்கத்தை காட்டியதுடன், போருக்கு உதவி வந்த தனது கூட்டாளி களான ஐரோப்பிய நாடுகளை எந்த பேச்சுவார்த்தையிலும் இணைத்துக் கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட சிறு முரண்பாட்டின் காரணமாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட நாடுக ளின் தலைமையில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை செய்ததுடன் ராணுவ வீரர்களையும் அனுப்பின. எனினும் அதிகாரப்பூர்வமாக நேட்டோ ராணுவத்தை உக்ரைனுக்குள் அனுப்புவதற்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் போலந்து எல்லைக்குள் வந்த ரஷ்ய டிரோன்களை நேட்டோ உறுப்பு நாடு களுடன் சுட்டு வீழ்த்தியதாக நேட்டோ நாடுகள் கூறியுள்ளன.