இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரால் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக்டோபர்.7 ஆம் தேதி ஆரம்பித்த போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் படையினர் காசா பகுதியை கொடூரமாக தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களைச் சேகரிக்க பல்வேறு நாட்டில் இருந்து பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர்.
தகவல் சேகரிக்கச் சென்றவர்களில், இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில், 26 பாலஸ்தீனர்கள், 4 பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் லெபனானை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.