சீனாவைத் தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராக ஈரான் இணையவுள்ளது.
2001 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பாதுகாப்புப் பிரச்சனைகளை இணைந்து எதிர்கொள்வது, ராணுவ ரீதியான ஒத்துழைப்பது மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பது ஆகிய அம்சங்களை முன்வைத்தது. இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு 2006 ஆம் ஆண்டில் ஈரான் விண்ணப்பபித்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில்தான் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்தது. அந்நாட்டை இணைப்பதற்கான பணிகள் 2022 ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கின. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உறுதிமொழிப் பத்திரத்தில் ஈரான் கையெழுத்திட்டது. அக்டோபர் 2022ல் ஈரான் நாடாளுமன்றத்தில் இதில் சேருவதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
ஜூலை மாதம் 4 ஆம் தேதியன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் இந்தியத் தலைவர் புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஈரானை முழு உறப்பினராக சேர்ப்பதற்கான ஒப்புதல் வழங்கப்படும். ஈரானின் இணைப்பால் இந்த அமைப்பின் வர்த்தக அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை உடைக்கவும் இந்த முழு உறுப்பினர்கள் அந்தஸ்து ஈரானுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.