world

img

பேஜர்கள் வெடிப்பு: இஸ்ரேல் மீது லெபனான் குற்றச்சாட்டு

லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜர் தொலைத் தொடர்பு சாதனங்கள் வெடித்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது லெபனான் குற்றம்சாட்டியுள்ளது.  

லெபனானிலும், சிரியாவிலும் பேஜர் தொலைத் தொடர்பு சாதனங்கள் திடீரென நேற்று வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 2800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பேஜர்களை வெடிக்க வைத்தது இஸ்ரேல் தான் என்று லெபனான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜியாத் மக்காரி குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலுக்கு சரியான தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான காசா போர் உச்சத்தில் இருக்கும் சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது இஸ்ரேலின் தொழில்நுட்பத் தாக்குதல் என லெபனான் அதிகாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே, இஸ்ரேலுக்கும் , பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், பேஜர் வெடிப்பு சம்பவத்திற்கு பின்னால் இஸ்ரேல் உள்ளது என குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதகரிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.