world

img

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் பலியாகியுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேலின் எல்லைக்கு அருகே உள்ள கிராமங்களில் அந்நாட்டு ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.

செப்.23 முதல் இஸ்ரேலிய ராணுவம் லெபனான் மீது தீவிரமான வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலும் மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நாளுக்கு நாள் போர் பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது.