world

img

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் பலி

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

காசாவின் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்கத்தில் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில், தெற்கு லெபனானில் உள்ள கானா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி இன்று தாக்குதலில் ஈடுபட்டது. இதில், கட்டட இடிபாடுகளில் இருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளையும் இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியது. கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பிறகு பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த 5 பேர் பலியாகியதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலி இதுவரை லெபனானில் 2300 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த மாதம் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.