நடப்பாண்டிற்கான நோபல் பரிசு திங்கள் (அக்.7) முதல் அறிவிக்கப் பட்டு வந்தது. அதன்படி திங்க ளன்று மருத்துவத் திற்கும், செவ்வா யன்று இயற்பியலுக் கும், புதனன்று வேதி யியலுக்கும், வியாழ னன்று இலக்கியம் ஆகிய பிரிவுகளுக் கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நோபல் பரிசின் கடைசி நிகழ்வான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. உலகின் மத்திய கிழக்கு, உக்ரைன், சூடான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போர் நடைபெற்றுகொண்டிருக்கும் சூழலில் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்திற்கு எதிராக போராடி வரும் ஜப்பானைச் சேர்ந்த நிகோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நோபல் பரிசுகள் ஸ்வீடனின் ஸ்டாக் ஹோம் நகரில் அறிவிக்கப்பட்ட நிலை யில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.