பாகிஸ்தானில் இருந்து ஈரான் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர்.
ஈரானில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்துக்கு பாகிஸ்தானிலிருந்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்,28 பேர் பலியாகினர்.
நேற்று இரவு மத்திய ஈரான் மாகாணமான யாஸ்த் பகுதியில் இந்த விபத்து நேரிட்டதாகவும், மீட்புப் பணிகள் இரவு முழுவதும் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 28 பேர் பலியான நிலையில். 23 பேர் காயமடைந்தனர். அதில், 14 பேர் படுகாயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேருந்து விபத்தில் சிக்கியபோது, அதில் 51 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஈரானில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்துக்கு பாகிஸ்தானிலிருந்து பக்தர்கள் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.