வாஷிங்டன், பிப். 12 - அமெரிக்காவில் ஊழல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள கவுதம் அதானி உள்ளிட்ட பல ஊழல் முதலாளிகளை தப்பிக்க வைப்பதற்காக வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டம் 1977-ஐ 180 நாட்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் விசுவாசியாக அறியப்படுகின்ற அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி அந்த சட்டத்தின் கீழ் நடைபெறுகிற விசாரணைகளை நிறுத்திவிட்டு இந்த சட்டத்தை மதிப் பாய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள் ளார். அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்தைச் சேர்ந்த ஆறு பேர் இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில அளவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு சுமார் 2000 கோடி கள் வரை லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க பங்குச் சந்தையில் பெற்ற அந்நாட்டு மக்களின் பணத்தில் தான் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்து ஊழல் செய்துள் ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டு இந்தியா விற்கு சர்வதேச அளவில் தலை குனிவை ஏற்படுத்தியது. மேலும் இதனை தொடர்ந்து அதானியின் பங்குகள் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில் தான், வெளி நாட்டு ஊழல் நடைமுறைச் சட்டம் 1977-ஐ நிறுத்திவைத்து டிரம்ப் உத்த ரவிட்டுள்ளார். இந்த இடைநிறுத்தம் 180 நாட்களுக்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.