உலகம் முழுவதும் இன்று (மே 3) பத்திரிகை சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17இல் கொலம்பியப் பத்திரிகையாளரான கிலெர்மோ கானோ இசாசா அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்து உலக பத்திரிகையாளர்களின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வோரு ஆண்டும் மே 3-ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகிறது.
ஊடக சுதந்திரம், பத்திரிகையாளர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நலன்களை வலியுறுத்தும் வகையில், உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.