உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.23 கோடியாக உயர்ந்துள்ளது.
சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 8,23,22,190 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 17,96,292 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 5,83,31,524 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,21,94,374 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,05,939 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகில் கொரோனா தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,99,77,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,46,579 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 1,18,44,472 பேர் குணமடைந்துள்ளனர், 77,86,653 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 29,132 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தியா 1,02,45,326 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,48,475 ஆக உள்ளது. இதுவரை 98,33,339 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் பிரேசில் தற்போது 1,92,716 உயிரிழப்புகளுன் இரண்டாவது இடத்தில் உள்ளது