மெக்சிகோ சிட்டி,நவ.9- ஜி-20 நாடுகள் ராணுவத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் செய்யும் மொத்த செலவில் 1 சதவீத பணத்தை வறுமை ஒழிப்பு, பாலின சமத்து வம், பெண்ணுரிமை பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய ஒதுக்க வேண்டும் என மெக்சிகோவின் இடதுசாரி ஜனாதிபதியான கிளாடியா ஷேய்ன்பாம் (Claudia Sheinbaum ) அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 18 அன்று பிரேசில் தலைமையில் அந் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 நாடு களின் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்நிலை யில் கிளாடியாவின் கருத்து அம்மாநாட்டில் மெக்சிகோவின் நிலைப்பாடு, திட்டம், முன்மொழி வுகள், பசி, வறுமைக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்தும் என தெரிய வருகிறது. உலகம் முழுவதும் வறுமையில் உள்ள ஒடுக்குமுறையை சந்திக்கக் கூடியவர்களின் பாதுகாப்பிற்காக ஜி- 20 நாடுகளின் ராணுவச் செல வினங்களில் 1 சதவிகிதத்தை ஒதுக்க வேண்டும் என தங்கள் நாடு முன்மொழியும் எனவும் மெக்சி கோ இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தான பார்வையை நாங்கள் முன்வைப்போம் என கிளாடியா குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், இது பிரச்சனைகளை தீர்க்கும் சந்தை அல்ல. அதைத்தான் நாங்கள் பெரும் பெருமையுடன் கூட்டமைப்பின் முன்பாக வைக்கப் போகிறோம் என்ற அவர், லத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சிக்கான பாதைகளைத் திறப்பது அவசியமானது என்றும் வலியுறுத்தி யுள்ளார். மேலும் நாங்கள் பெண்களின் உரிமைக ளுக்காக விவாதிப்பதுடன் மெக்சிகோ பெண்களுக் கான உரிமைகளை உறுதி செய்வதால் எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை எடுத்துக்கூறுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். மெக்சிகன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுவான் ரமோன் டி லா ஃபுவென்டே பேசிய போது, தங்கள் நாடு பாலின சமத்துவம், நிலையான வளர்ச்சி, தொழில்நுட்ப நிகழ்ச்சி நிரலை சர்வதேச மன்றங்களில் தெளிவாக விவாதிப்பதில் ஆர்வ மாக உள்ளது என்றார். தற்போதுவரை இந்த ஆண்டு ஜி- 20 மாநாட் டில் பங்கேற்கப்போகும் ஒரே பெண் தலைவராக மெக்சிகோ இடதுசாரி ஜனாதிபதி உள்ளார். கனடா, சீனா, தென் கொரியா, பிரான்ஸ், இந்தியா, இந்தோ னேசியா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் ஜனாதிபதி கிளாடியா உடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த நேரம் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் 1 நாள் அம்மாநாட் டில் பங்கேற்று இரு அமர்வுகளில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.