ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா – உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒவ்வொரு வாரமும், கொரோனாவில் உயிரிழப்போர் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் குறைவில்லாமல் இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று கடந்த வாரத்தில் ஐரோப்பாவில் 6 சதவீதமும், ஆசியாவில் 12 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் ஐரோப்பிய நாடுகள் கொரோனா காற்றின் மையப்பகுதியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.